நெல்லை: நெல்லையில் நேற்று பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "தேமுதிக பதிலை எதிர்பார்க்கிறோம்," என்றார். திருமண விழாவில் பங்கேற்பதற்கு முன் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். "இம்மாதம் 26ஆம் தேதி மக்கள் நலக் கூட்டணி சார்பில் மதுரையில் எழுச்சி மாநாடு நடை பெறகிறது. இந்த மாநாடு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற் படுத்தும். மக்கள் நலக் கூட் டணிக்கு ஆதரவு பெருகி வரு கிறது. அதிமுக, திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
"மதுவிலக்கு, ஊழல் பற்றி மக்கள் நலக் கூட்டணி மட்டுமே பேச முடியும். மதுவிலக்கை அமுல்படுத்த முடியாது என அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறுவது கண்டிக்கத்தக்கது. சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். மக்கள் நலக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரும்.
கூட்டணி குறித்து தேமுதிகவின் பதிலை எதிர்பார்க்கிறோம். ஆனால் அவர்கள் எந்தப் பதிலும் கூற வில்லை," என்று மதிமுக தலைவர் வைகோ கூறினார்.