நயனுடன் போட்டி போடும் காஜல்

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணியில் இருக்கும் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது 'கவலை வேண்டாம்' என்ற படத்திலும் தமிழ், தெலுங்கில் தயாராகும் 'பிரம்மோற்சவம்' படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார். இவர் விஜய் ஜோடியாக நடித்த 'துப்பாக்கி' படம் வசூலில் சாதனைப் படைத்தது. 'ஜில்லா' படமும் வெற்றிகரமாக ஓடியது. அதனைத்தொடர்ந்து தற்பொழுது மீண்டும் இவர் பக்கம் விஜய் என்ற அதிர்ஷ்டக்காற்று வீச ஆரம்பித்திருக்கிறது. விஜய்யுடன் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதனால் காஜல் தற்பொழுது நயன்தாரா வாங்கும் சம்பளத்தைப்போல தன்னுடைய சம்பளத்தையும் இரண்டரைக் கோடிக்கு ஏற்றியிருக்கிறார்.

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. அதனால் 'தெறி'யை பிரம்மாண்டமான முறையில் விளம்பரங்கள் செய்து, ஏப்ரல் 14ஆம் தேதியன்று இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தாணு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!