வில்சன் சைலஸ்
முதன்முறையாக போட்டியில் கலந்துகொண்டவருக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றி. 'தமிழ் முரசு' நாளிதழின் துணைப் பத்திரிகையான 'தப்லா!' வார இதழ் நேற்று முன்தினம் ஏற்பாடு செ ய் தி ரு ந் த ' த ப் லா ! ' கி ண் ண கோல்ஃப் போட்டியில் வெற்றி வாகை சூடினார் 58 வயது திரு கலைமணி. தப்லா கிண்ணம் குறித்து இதற்கு முன்பு கேள்விப்பட்டிருந்த போதும் முதன்முறையாக இவ்வாண்டு அதில் கலந்து கொள்ள விரும்பிய திரு கலைமணி, தமக்கே தப்லா கிண்ணம் எனச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.
"நான் அதிர்ஷ்டசாலி. என் பெயரை அறிவித்தபோது ஒரு நிமிடம் நான் ஆச்சரியப்பட்டேன். கனத்த மழை பெய்தபோதும் திறமையுடன் விளையாடியதில் பெருமிதம் கொள்கிறேன்," என்ற அவர், தமது நண்பர்களுடன் நேற்று உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினார். ஷிண்டா பொறியியல் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகியாகப் பணியாற்றி வரும் திரு கலைமணிக்குக் கோல்ஃப் போட்டிகளில் வெற்றிபெறுவது புதிதல்ல. பதின்ம வயதிலிருந்து கோல்ஃப் விளையாடி வருகிறார். ராஃபிள்ஸ் கிளப் உறுப்பினராக அண்மையில் நடைபெற்ற உள்ளூர் கோல்ஃப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றார் அவர்.
கோல்ஃப் போட்டியில் வெற்றி பெற்ற திரு கலைமணிக்கு தப்லா வெற்றிக் கிண்ணத்தை வழங்குகிறார் மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா. அருகில் தமிழ் முரசின் தலைவர் திரு எஸ். சந்திரதாஸ். படங்கள்: திமத்தி டேவிட், சுகநிதிசெல்வன்