தைப்பூசத் திருவிழா: லயன் சித்தி விநாயகர் கோவிலுக்கு வெள்ளி ரதத்தில் வந்த அருள்மிகு தெண்டாயுதபாணி

தைப்பூசத் திருவிழாவை முன் னிட்டு அருள்மிகு தெண்டாயுத பாணி வீற்றிருக்கும் வெள்ளி ரதத்தின் வீதி உலா நேற்றுக் காலை தொடங்கியது. தேங் ரோட்டில் உள்ள அருள் மிகு தெண்டாயுதபாணி கோயிலை விட்டு காலை 5.00 மணிக்குப் புறப்பட்ட வெள்ளி ரதம் காலை 7.00 மணிக்கு சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சுமார் 15 நிமிடங்கள் நின்று மரியாதையை ஏற்றுக்கொண்டு விட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு கியோங் செய்க் ரோட்டில் உள்ள அருள்மிகு லயன் சித்தி விநாயகர் கோயிலைச் சென்றடைந்தது. பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட ரதம் செட்டியார் சமூகத்தினரின் காவடிகள் முன் செல்ல மத்திய வர்த்தக வட்டாரத்தின் சில பகுதி களைக் கடந்து இரவு 9.00 மணி யளவில் அருள்மிகு தெண்டாயுத பாணி கோயிலுக்கு வந்து சேர்ந்தது.

நேற்று நள்ளிரவுக்கு முன் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் ராஜகோபுர கதவு மூடப் பட்டு, நள்ளிரவுக்கு சற்று முன் திறக்கப்பட்டது. 12.05 மணி யளவில் அருள்மிகு தெண்டா யுதபாணிக்கு பூஜைகள், தீபா ராதனை இடம்பெற்று பின்னர் பால்குட அபிஷேகம் தொடங்கி யது. இன்றைய தைப்பூசத் திருவிழா பக்தர்களின் வேண்டுகோ ளுக்கு இணங்க பற்பல மாற்றங் களுடனும் சிறப்பு ஏற்பாடுகளுடனும் நடை பெறுகிறது.

கியோங் செய்க் ரோட்டில் உள்ள அருள்மிகு லயன் சித்தி விநாயகர் கோயிலை நேற்றுக் காலை சென்றடைந்த வெள்ளி ரதத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு தெண்டாயுதபாணியை அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வணங்குகின்றனர். படம்: த. கவி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!