பனிப்புயல்: வீடுகளுக்குள்ளேயே இருக்க 50 மில்லியன் மக்களுக்கு ஆலோசனை

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை மாபெரும் பனிப்புயல் ஒன்று நெருங்கியதைத் தொடர்ந்து தலைநகர் வா‌ஷிங்டன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பனிப்பொழிவு வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் பனிப்புயல் காரண மாக சில மணி நேரங்களில் இரண்டடி உயரத்திற்கு உறைபனி குவியும் என எச்சரிக்கப் பட்டிருந்தது. பனிப்புயல் தற்போது வடக்கு நோக்கி வீசத் தொடங்கி யிருப்பதால் பல மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடுமையான பனிப்புயல் காரணமாக வா‌ஷிங்டன் நகரம் அதிகமாகப் பாதிக்கப்படும் என்று முன்னதாகவே எச்சரிக்கப் பட்டிருந்தது. பனிப்புயலில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். ஆறு மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக் கப்படுவதோடு விமானப் போக்குவரத்தும் தடைபடக்கூடும் என்று அதிகாரிகள் அறிவித்துள் ளனர்.

வா‌ஷிங்டனில் பனிப்புயல் வீசும் வேளையில் சாலைகளில் உறைபனி நிறைந்துள்ளது. பனிப்புயலால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!