சீனாவின் முன்னேற்றத்தை அமெரிக்கா தடுக்கவில்லை

டாவோஸ்: ஆசிய வட்டாரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்து வதில் அமெரிக்கா கொண்டுள்ள கடப்பாடு, சீனாவின் முன் னேற்றத்தை தடுப்பதற்காக அல்ல என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் தெரிவித்துள்ளார். ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்கா கொண்டுள்ள கடப்பாடு இந்த வட்டாரத்தின் வளர்ச்சியையும் அமைதியையும் உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் அதற்கு உதவும் வகையில் அமெரிக்க தற்காப்புப் படை அதன் முழு வளங்களையும் பயன்படுத்தும் என்றும் திரு கார்ட்டர் கூறினார். ஆசியாவில் அமெரிக்க ராணுவம் பல ஆண்டுகளாக நிலைத்திருக்கிறது என்றும் இதனால் ஜப்பான், தென் கொரியா அல்லது கிழக்கு ஆசிய நாடுகளின் துரித வளர்ச்சி பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சொன்னார்.

அதேபோல சீனாவின் முன்னேற்றத்தையும் அமெரிக்கா தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். சீனாவுடனான தகராறு தவிர்க்க முடியாதது என்று தான் கருதவில்லை என்றும் அவர் சொன்னார். நன்மை பெற இரு தரப்பும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டாவோசில் நடந்த கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு கூறினார்.

அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் தென்சீனக் கடல் பகுதிக்கு வந்தபோது அமெரிக்க கடற்படை வீரர்கள் ராணுவ மரியாதையுடன் அவரை வரவேற்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!