ஜெயலலிதா: வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்

சென்னை: தேர்தல் வாக்குறுதி களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று உரையாற்றிய அவர், தனக்குப் பிறகும் கூட அதிமுக மக்களுக் காகத் தொடர்ந்து இயங்கும் என்றார். "தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும் தமிழர்களின் மொழி, இன, கலாசார உணர்வுகளை மீட்டெடுத்து எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, எதிர்காலத் தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் தலைநிமிர்ந்து சொந்தக் காலில் நிற்பதற்கான வழியை உருவாக்கிடுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம்.

"கல்வி, மருத்துவம், விவசா யம், நதிநீர், அடிப்படைக் கட்ட மைப்பு, வீடு, மின்சாரம், தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத் துவம் கொடுத்து, தமிழகத்தை தலைநிமிரச் செய்வதுதான் அதிமுகவின் லட்சியம். இதை பிரகடனம் செய்து, இவற்றை எல்லாம் நிறைவேற்ற செயல் படுத்தப்படும் திட்டங்களைப் பற்றி தேர்தல் அறிக்கையில் தெரி வித்திருந்தோம். அவை அனைத் தும் நிறைவேற்றப்பட்டுள்ளன," என்றார் ஜெயலலிதா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!