"எம்ஜிஆரிடம் இருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டு விரட்டியவர்தான் ஜெயலலிதா"

சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரிடம் இருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டவர் நடப்பு முதல்வர் ஜெயலலிதா என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், எம்ஜிஆரை பின்னர் ஜெயலலிதா விரட்டிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், யானைகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் உருவ ஒற்றுமை உள்ளது என்றும் அவர் விமர்சித்திருப்பது அதிமுகவினர் இடையே பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. "ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் நல்லதைச் செய்வார் என நம்பியே தமிழக மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தினர். ஆனால், அவரால் எதையும் செய்ய முடியாது என்பதை கடந்த ஐந்தாண்டுகளில் நிரூபித்துவிட்டார்.

இனி அவர், தமிழகத்தின் முதல் வராகத் தேவையில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தமிழகத்தில் நல்ல மாற்றம் ஏற் படப் போகிறது. அதை யாராலும் தடுக்கமுடியாது," என்றார் இளங்கோவன். ஜெயலலிதா ஆட்சியில் பணம் கொடுக்காவிட்டால் ஒரு வேலை யும் நடக்காது என்று குறிப்பிட்ட அவர், முன்னாள் முதல்வர் காமராஜர் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி சிறைக்குச் சென்றதாகவும் ஜெயலலிதாவோ, நாட்டைக் கொள்ளையடித்து வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து சிறைக்குச் சென்றதாகவும் கூறினார். "ஒரு பெரியவரிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டு அவரை வெளியேற்றினீர்கள். அந்த அம்மாவுடன் யாரும் எந்தத் தொடர்பும் வைக்கவேண்டாம் என்றார் அந்தப் பெரியவர். அவர் வேறு யாரும் இல்லை, எம்ஜிஆர்தான்.

"வழக்குகள் தொடுத்து திமுக, பாமகவை அடக்கி விடலாம். இந்த இளங்கோவனின் வாயை அடக்கிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. "பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் யானைகளுக்கு முகாம் கள் நடத்துகிறார்கள். அப்படி என்ன யானைகள் மீது பாசம்? உங்களுக்கும் யானைகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை உருவ ஒற்றுமை," என்றார் இளங்கோவன். அதிமுக ஆட்சியில் எல்லாவற் றிலும் ஊழல் நடந்திருப்பதாகக் கூறிய அவர், மத்தியில் மோடியும் தமிழகத்தில் உள்ள 'லேடி'யும் (ஜெயலலிதா) மக்கள் விரோத சக்திகள் என்றும் அச்சக்திகளை வெளியேற்றவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!