முஹம்மது ஃபைரோஸ்
இஸ்லாமிய சமயத்தைப் பின்பற் றும் அனைவரையும் சிங்கப்பூரர் கள் பயங்கரவாதிகளாகப் பார்க் கக்கூடாது என்று சட்ட, உள் துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊழியர்களாக இருக்கட்டும், உள்ளூர் முஸ்லிம் களாக இருக்கட்டும் அவர்களின் சமயத்தையோ அல்லது அதைப் பின்பற்றும் அனைவரையுமோ வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்ப்பதற்குக் காரணம் கிடை யாது என்றார் அவர். கேலாங் சாலையில் உள்ள கதிஜா பள்ளிவாசலில் நேற்று மதிய வேளை உணவு நிகழ்ச்சி யில் பங்ளாதேஷ் ஊழியர்களுடன் கலந்துரையாடிய பிறகு செய்தி யாளர்களிடம் திரு சண்முகம் பேசினார்.
சுயமாக தீவிரவாதச் சிந் தனையை வளர்த்துக்கொண்ட 27 பங்ளாதேஷ் கட்டுமான ஊழி யர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டதாக அண்மை யில் வெளியான செய்தியைத் தொடர்ந்து திரு சண்முகம் கருத்துரைத்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் 'ஜிகாத்' எனும் ஆயுத மேந்தி புனிதப்போர் நடத்தும் அல்=காய்தா, 'ஐஎஸ்ஐஎஸ்' போன்ற பயங்கரவாத அமைப்பு களின் செயல்களை ஆதரித்து வந்ததாகத் தெரியவந்தது.
கதிஜா பள்ளிவாசலுக்கு வந்திருந்த பங்ளாதேஷ் ஊழியர்களிடம் உரையாடும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்