மனீஷ் பாண்டே அபாரம்

மனீஷ் பாண்டே அபாரம், இந்தியா பரபரப்பான வெற்றி சிட்னி: இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய வீரர் மனீஷ் பாண்டே சதமடித்து இந்திய வெற்றிக்குத் துணைப் புரிந்தார்.

330 ஓட்டங்களை விரட்டிய இந்திய அணிக்கு ‌ஷிகர் தவான், ரோஹித் சர்மா இருவரும் சிறப் பான துவக்கத்தைத் தந்தனர். இவர்களது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ஓட்டங் களை எட்டியது. தொடர்ந்து ‌ஷிகர் தவான் 42 பந்துகளில் அரை சதம் எட்டினார். ஆனால் அவரின் அதிரடி ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 78 ஓட்டங் களுக்கு தவான் ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த கோஹ்லி வெறும் 8 ஓட்டங்களுக்கு ஆட்ட மிழந்து ஏமாற்றமளித்தார். களத்தில் இணைந்த ரோஹித் சர்மா, மனீஷ் பாண்டே ஜோடி, முதலில் தடுமாறியபோதும் ஓட்டங் கள் எடுப்பதில் முனைப்புக் காட்டி னர். ரோஹித் சர்மா 60 பந்துகளில் அரை சதம் எடுத்தார். மணீஷ் பாண்டேவும் அவ்வபோது சிக்ஸர், பவுண்டரிகள் என புகுந்து விளை யாடினார்.

நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் மனீஷ் பாண்டே தமது திறமையைக் காட்டுகிறார். இவர் 35 பந்துகளில் அரைசதம் எடுத்து, பின்னர் 80 பந்துகளில் சதம் அடித்து ரசிகர்களின் மனங்களைக் குளிர வைத்தார். இது அவருடைய முதல் சதம் என்பதுடன் இந்தியாவின் வெற்றிக்கு இவர் பெரும் பங்காற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!