மேளதாளம் முழங்க தைப்பூசத் திருவிழா

தமிழவேல்

நாதஸ்வரம், தவில், உறுமி மேளம் கொட்ட வழியெங்கும் ஆடிக்கொண்டே களைப்பு மறந்து காவடி சுமந்த பக்தர் களின் ஆட்டம் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் உட் பட பலரையும் உற்சாகப்படுத் தியது. கிட்டத்தட்ட 40 ஆண்டு களுக்குப் பின்னர் இந்த தைப் பூசத் திருவிழாவுக்கு உயிரூட்டி யது நேரடி இசை.

தைப்பூசத் திருவிழாவில் புத்துணர்ச்சி தென்படுகிறது என்றும் புதிய ஏற்பாடுகளால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதைக் காண முடிகிறது என்றும் நேற்று தைப்பூசத் திருவிழாவைக் காண வந்த அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.

சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் முதல் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் வரையிலான 4 கிலோ மீட்டர் பாதை நெடுகிலும் இவ்வாண்டு பக்தி இசை மழை பொழிந்தது. பிற்பகலில் பெய்த மழையை யும் பொருட்படுத்தாமல் வழியில் இருந்த மூன்று நேரடி இசை மேடைகளுக்கு அருகே காவடி ஏந்திய பக்தர்கள் தங்கள் களைப்பு தீர ஆடி மகிழ்ந்தனர். காலையில் பெருமாள் கோயி லுக்கு வருகை தந்த அமைச்சர் சண்முகம் பக்தர்களுடன் பேசி யதுடன் கிச்சனர் சாலை வரை நடந்து சென்றார். பின்னர் டோபி காட் அருகே அமைக்கப் பட்ட நேரடி இசைக் கூடத்தையும் அவர் பார்வையிட்டார்.

நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற்ற மையங்களில் ஒன்றுக்குச் சென்றிருந்த சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், காவடி ஆட்டம் ஆடிய பக்தரைப் பார்வையிட்டார். படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!