மலேசியாவில் ஐஎஸ் சந்தேக நபர்கள் எழுவர் பிடிபட்டனர்

மலேசியா முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற் கொள்ளப்பட்ட தேடுதல் நட வடிக்கையில் ஐஎஸ் போராளிகள் என்ற சந்தேகத்தில் ஏழு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த எழுவரும் 26க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதினர் என்று மலேசிய தலைமைப் போலிஸ் அதிகாரி காலிட் அபுபக்கர் நேற்று தெரிவித்தார். கோலாலம்பூர், புக்கிட் அம் மான் சிறப்பு போலிஸ் பிரிவினரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின ரும் கூட்டாகச் சேர்ந்து தேடுதல் நடத்தியபோது ஜோகூர், கெடா, பாகாங், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் இந்த எழுவரும் பிடிபட்டதாக அவர் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தது.

பிடிபட்டுள்ள சந்தேக நபர்கள் மலேசியாவின் பகுதிகளில் தாக்கு தல்கள் நடத்தத் திட்டம் கொண் டிருந்தனர் என்று அறிக்கை ஒன் றில் திரு காலிட் குறிப்பிட்டுள்ளார். எழுவரில் ஒருவர் முஹம்மது வாண்டி முஹம்மது ஜேடி என்னும் போராளியிடமிருந்து கட்டளை களைப் பெற்றதாகவும் மற்றொரு வர் அண்மையில் நிகழ்ந்த ஜகார்த்தா தாக்குதலுக்கு உத்த ரவிட்ட பஸ்ரோம் நயிமிடம் இருந்து கட்டளைகளைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!