சிங்கப்பூரில் பிறந்து, எட்டு வயதில் நியூசிலாந்துக்குக் குடி பெயர்ந்து சென்ற பிராண்டன் ஸ்மித், 19, (படம்) தேசிய சேவை யிலிருந்து விலக்களிக்குமாறு கோரியுள்ளார் என்று நியூசிலாந்து ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், பிராண்டனுக்கு விலக்கு மறுக்கப்பட்டுள்ளது. டனெடின் என்ற நகரில் வசிக்கும் பிராண்டன் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டும் என்று சிங்கப்பூர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி அவர் நடக்காததால் பிராண்டன் ஈராண்டுச் சிறைத் தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் எதிர்நோக்குகிறார்.
சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய இரு நாட்டுக் குடியுரிமை வைத்திருக்கும் பிராண்டன் 21 வயதாகும் போதுதான் அவரது சிங்கப்பூர் குடியுரிமையைத் துறக்க முடியும். தேசிய சேவை செய்வது 'கடினமானது பொருளற்றது' என்று கூறிய பிராண்டன், "எதற்காக என்றே புரியவில்லை. நேர விரையம். எப்படியும் இங்கே தான் வர வேண்டும்," என்றார். தேசிய சேவையில் பெறக் கூடிய ஊதியம் தனது செலவு களுக்குப் போதாது என்று கூறிய பிராண்டன் தனக்கு மாண்டரின் மொழி பேசத் தெரியாததால் தேசிய சேவையில் தான் ஒதுக்கப் படக்கூடும் என்றும் கூறினார்.