குமரி அனந்தன்: உயிரோடு இருக்கும் வரை மது விலக்கு கோரி போராடுவேன்

சிவகங்கை: உயிரோடு இருக்கும் வரை மதுவிலக்கிற்காக தாம் தொடர்ந்து போராடப்போவதாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி.யு மான குமரி அனந்தன் கூறி உள்ளார். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் இருந்து கன்னியா குமரி வரை நடைப்பயணம் மேற் கொண்டுள்ளார் குமரி அனந்தன். நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்ட எல்லையான நேமத்தான் பட்டியில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் வழியெங்கும் பொதுமக்கள் தமக்கு வரவேற்பு அளிப்பதாகக் கூறினார். "மக்கள் பூரண மதுவிலக்கிற்கு முழுமையான ஆதரவு தெரிவிக் கின்றனர். ஆனால், அமைச்சர் நத்தம் விசுவநாதனோ சட்டப் பேரவையில் பேசும்போது தமிழகத் தில் மது விலக்கு என்பது சாத்தி யமே இல்லை என்கிறார். மக்கள் விருப்பத்தை மதித்துச் செயல்பட வேண்டியது அரசின் முக்கிய கடமை. "நான் உயிரோடு இருக்கும் வரை தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி தொடர்ந்து போராடுவேன்," என்று குமரி அனந்தன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!