‘தர்மதுரை’ படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த வைரமுத்து

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் தர்மதுரை. தமன்னா, ‌ஷிவதா என இரு நாயகிகள். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் அண்மையில் ஒருநாள் திடீரென படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துள்ளார் வைரமுத்து.

சீனு ராமசாமி உட்பட படக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. சில காட்சிகள் படமாக்கப்படுவதை நேரில் கண்ட வைரமுத்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து புறப்பட்டுச் சென்றார். கவிஞர் நேரில் வந்து வாழ்த்திய உற்சாகத்துடன் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!