மேன் சிட்டியை காப்பாற்றிய அகுவேரோ

வெஸ்ட்ஹேம்: நேற்று அதிகாலை இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்ட மொன்றில் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு வரும் கனவில் மிதந்துகொண்டிருக்கும் மான் செஸ்டர் சிட்டி குழு அதன் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக் காரர் செர்ஜியோ அகுவேரோ இரண்டு கோல்கள் போட்டதால் வெஸ்ட்ஹேம் குழுவுடன் 2-2 என சமநிலை கண்டது. நேற்றைய ஆட்டம் தொடங்கிய உடனேயே, முதல் நிமிடத்தில், வெஸ்ட்ஹேம் குழுவின் என்னர் வெலன்சியா முதல் கோல் போட்டு மான்செஸ்டர் சிட்டி குழுவைத் திக்குமுக்காட வைத்தார்.

எனினும், சீக்கிரம் சுதாரித்துக் கொண்ட சிட்டி குழு ஒன்பதாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் ஆட்டத்தைச் சமன் செய்தது. இந்தப் பெனால்டி வாய்ப்புக் கிடைத்தற்கும் அகுவே ரோவே காரணம். பின்னர், ஆட்டத்தின் 56ஆம் நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி யின் தற்காப்பு ஆட்டக்காரர் நிக்கலஸ் ஒட்டாமென்டி தமது ஆட்டத்தில் தயக்கம் காட்ட அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட என்னர் வெலன்சியா மீண்டும் மான் செஸ்டர் சிட்டிக்கு எமனாக உருவெடுத்து வெஸ்ட்ஹேமின் இரண்டாவது கோலை போட்டார்.

ஆனால் மீண்டும் மான்செஸ் டர் சிட்டியின் உதவிக்கு வந்த செர்ஜியோ அகுவேரோ, ஆட்டம் முடிய ஒன்பது நிமிடங்களே உள்ள நிலையில் இரண்டாவது கோலை போட்டுத் தமது அணிக்கு ஒரு புள்ளியைத் தேடித் தந்தார். பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலில் உள்ள முதல் மூன்று குழுக்களில் மான்செஸ்டர் சிட்டி குழுவே எதிரணி மைதானத்தில் விளையாடும்போது அதிக சந் தர்ப்பங்களில் தோற்பதாக காற் பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுவரை சிட்டி குழுவினர் எதிரணி மைதானத்தில் விளையா டிய ஆறு ஆட்டங்களில் வெறும் ஆறு புள்ளிகளே பெற்றுள்ளதாக வும் இது பிரிமியர் லீக்கின் வெற்றியாளர் கிண்ணத்தை வெல்வதற்குப் போதாது என்றும் பிபிசி செய்தி கருத்துக் கூறியுள்ளது.

நேற்று மான்செஸ்டர் சிட்டிக்கும் வெஸ்ட்ஹேம் குழுவுக்கும் இடையே நடந்த காற்பந்துப் போட்டியில் சிட்டி அணியின் இரண்டாவது கோலை போடும் செர்ஜியோ அகுவேரோ. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!