தந்திரமாகச் செயல்பட்ட டோனி

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் சிட்னியில் நடைபெற்றது. இதில் இந்தியா 49.4 ஓவரில் 331 ஓட்டங்கள் எடுத்தது. ஆட்டம் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த நிலையில் கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் சிக்சர் அடித்த டோனி அடுத்த பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 34 ஓட்டங்கள் சேர்த்தார். கடைசி ஓவரின் 2வது பந்தை டோனி தூக்கி அடித்தார்.

அந்தப் பந்து வார்னரை நோக்கிச் சென்றது. வார்னர் கேட்ச் பிடித்ததும் மனீஷ் பாண்டே விரக்தியில் ஆடுகளத்தின் நடுவில் அதிர்ச்சியில் உறைந்து அப்படியே நின்றார். டோனி மெதுவாக நடந்து வந்தார். மனீஷ் பாண்டே எதிர்முனையில் நிற்பதை அறிந்த டோனி, பாண்டேவை உடனடியாக பந்தை எதிர்கொள்ள இந்தப் பக்கம் வருமாறு அழைத்தார். இதனால் பாண்டே ஓடிவந்து ஸ்ட்ரைக்கர் பக்கம் நின்றார். இப்படி நிற்காவிடில் புதிதாக வந்த குர்கீரத் சிங்தான் 3வது பந்தை சந்திக்க வேண்டியிருந் திருக்கும். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 5 பந்தில் 6 ஓட்டங்கள் தேவை, குர்கீரத் சிங் சொதப்பியிருந்தால் அது இந்தியாவிற்குப் பாதகமாக அமைந்துவிடும். இதை எண்ணியே டோனி இந்தக் காரியத்தைச் செய்தார். இதனால் 3வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மனீஷ் பாண்டே சதம் அடித்ததுடன், அடுத்த பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!