sg50: துணைப் பிரதமராக உயர்ந்த விளையாட்டு ஆர்வலர்

துணைப் பிர­த­மர் தர்மன் சண்­மு­க­ரத்­னத்திற்கு சிறு வயது முதல் இருந்த ஒரே தணியாத மோகம் விளை­யாட்டு. ஹாக்கி, காற்­பந்து, கிரிக்­கெட், திடல்தடப் போட்­டி­கள், வாலிபால் செப்பாக் தக்ராவ், ரக்பி என எல்லா விளை­யாட்டை­யும் அவர் விளை­யா­டி­யி­ருக்­கிறார். அவர் ஏட்டுக் கல்­விக்கு முதல் முக்­கி­யத்­து­வம் தர­வில்லை. அத்­து­டன், மருத்­து­வத் துறையில் அவரது தந்தையைப் போல் ஈடுபட வேண்டும் என்ற விருப்­ப­மும் அவ­ருக்­கில்லை. மருத்­து­வக் கல்விப் பயில அயராத உழைப்­புத் தேவை என்பதை பதின்­ம­வ­ய­தி­லேயே உணர்ந்த தர்மன், அதி­லி­ருந்து வில­கி­யி­ருக்க முடி­வெ­டுத்­தார்.

"மருத்­து­வக் கல்­விக்கு நிறைய நேரம் செல­வ­ழிக்க வேண்­டி­யி­ருப்­ப­து­டன் பெரும் முயற்சி மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும். 17, 18 வயதில் என்­னி­டம் அந்த மனப்­போக்கு இல்லை. அப்பொழுது கல்­வி­யில் எனக்குக் கொஞ்சம்­கூட அக்­கறை­யில்லை. அத்­து­டன், மருத்­து­வப் படிப்­புக்கு ஆறாண்டு காலம் கடுமை­யாக உழைக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தால் அதி­லி­ருந்து வில­கி­யி­ருக்க முடி­வெ­டுத்தேன்," என்றார் திரு தர்மன். அவர் தமது சக்தி முழு­வதை­யும் விளை­யாட்டுகளில் செலுத்­தி னார். அவரது இத­யத்­தில் ஹாக்கிக்குத் தனி­யி­டம் இருந்தது. அதனால் ஆங்கிலோ சீனப் பள்ளி மாண­வ­ரான திரு தர்மன் அனைத்­துப் பள்­ளி­களையும் உள்ளடக்கிய ஹாக்கி அணியில் இடம்­பெற்­றார். "அப்­பொ­ழுது வாழ்க்கை எளிமை­யாக இருந்தது. போட்­டித்­தன்மை­யும் குறைவு. கல்­விக்கு அதிக நேரம் செலவிட வேண்­டி­ய­தில்லை. எனது நோக்­க­மெல்­லாம் அடுத்த நிலைக்­குச் செல்ல வேண் டிய அள­வுக்குப் படிப்­பில் கவனம் செலுத்­தி­விட்டு விளை­யாட்டுக் களில் நேரம் செல­வி­டு­வ­தி­லேயே இருந்தது.

எனது இளமைப் பரு­வத்தை மகிழ்ச்­சி­யா­கக் கழித்­ தேன்," என்றார் 58 வய­தா­கும் திரு தர்மன். 17வது வயதில் விளை­யாட்­டு­களில் அவ­ருடைய ஈடுபாடு எதிர் ­பா­ராத விதமாக முடி­வுக்கு வந்தது. அவரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள் முதலில் அவ­ருக்கு இத­யத்­ தில் துவாரம் இருப்­ப­தாக நினைத்­த­னர். பின்னர் ரத்த சோகை இருப்­பது தெரிந்த­வு­டன் நான்கு ஆண்­டு­களுக்குத் தினமும் 25 விதமான ஊட்­டச்­சத்து மாத்­திரை­களை அவர் உட்­கொள்ள வேண்­டி ­யி­ருந்தது. அதன் பிறகே அவர் குண­மடைந்தார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட குடும்பப் படத்தில் மனைவி, பிள்ளைகளுடன் திரு தர்மன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!