‘குடும்ப வாழ்க்கை நன்றாக அமைந்தது’

நடிகை நதியா தற்போது தெலுங் கில் 'அஆ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 41வது படம். "நான் 1984ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்தேன். அப் போது எனக்கு வயது 18. முத லில் 'நோக்கேத்த தூரத்து கண்ணும் நட்டு' என்ற மலை யாளப் படத்தில் நடித்தேன். "மும்பையில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கும் என் கணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் காதல் வயப்பட்டோம். நான் இஸ்லாமியப் பெண். அவர் மராட்டிய பிராமணர். மதத்தைப் பொருட்படுத்தாமல் எங்கள் பெற்றோர் காதலை ஏற்றுக்கொண்டனர்.

"எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர் வெளிநாட்டில் சென்று நன்றாக சம்பாதித்த பிறகு திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத் தோம். அப்போதுதான் எங்கள் குடும்ப நண்பரான பாசில் என்னை சினிமாவில் நடிக்க அழைத்தார்.

"திருமணம் தள்ளிப் போனதால் அதுவரை சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். தமிழில் நான் நடித்த முதல் படம் 'பூவே பூச்சூடவா'. எனது இயற்பெயர் ஜரீனா. சினிமாவுக்காக பாசில்தான் எனக்கு நதியா என்று பெயர் சூட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!