அண்ணா பல்கலையில் முறைகேடு: திமுக புகார்

சென்னை: அண்ணா பல் கலைக் கழக நியமனங்களில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கருணாநிதி பரபரப்பு அறிக்கை வெளியிட் டுள்ளார். தமிழக அரசின் ஆட்சி முடிவுக்கு வருகின்ற நிலையில் ஐந்தாவது ஆண்டின் இறுதிக் கட்டத்தில், துணைவேந்தர் முதல் ஆசிரியர்கள் பணி வரை நியமனம் செய்வதில் ஊழல், பேரம் நடைபெறுவதாக எங்கும் பேசப்படுவதாக அவர் தெரிவித்தார். "குறிப்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளுக்கு நியம னம் செய்வதில் பல தவறுகள் நடைபெறுவதாகத் தொடர்ந்து ஏடுகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

"இந்தப் பெரும் முறைகேட் டில் துணை வேந்தரும் அமைச்சரும் ஈடுபட்டிருப்ப தாக பல்கலைக்கழகத்தின் அனைத்துத் தரப்பிலும் கூறப் படுகிறது. "இட ஒதுக்கீட்டு கொள்கை யில் எவ்வித ஊனமும் ஏற்பட்டு விடாமல் காலிப்பணி இடங் களைச் சரியாகக் கணக்கிட்டு அறிவிப்பு செய்யவேண்டும்," என கருணாநிதி மேலும் வலியுறுத்தி உள்ளார். திமுக தலைவரின் இந்தப் பகிரங்கக் குற்றச்சாட்டு அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!