விஜயகாந்த் வாழ்த்து; பாஜகவினர் உற்சாகம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். விஜயகாந்தின் இந்தச் செயல் தமிழக பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்த லுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கடந்த நாடாளு மன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் தேமுதிகவை தன் பக்கம் இழுக்க பாஜக பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மாற்றி மாற்றி பல பாஜக தலைவர்கள் நேரில் சென்று விஜயகாந்தைச் சந்தித்தும் இது வரை சாதகமான பதில் இல்லை.

இந்நிலையில், அமித் ஷாவிற்கு நீண்ட வாழ்த்துச் செய்தி அனுப்பி இருக்கிறார் விஜயகாந்த். அமித் ஷாவிற்கான தமது வாழ்த்துச் செய்தியில், "உங்களது தெளி வான நோக்கமும் செல்வாக்கும் களைப்பறியா கடின உழைப்பும் ஒவ்வொரு பாஜக தலைவரின், தொண்டரின் கனவுகளை நிச்சய மாக சாத்தியமாக்கும் என்று நம்புகிறேன்," என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதனால் பாஜக கூட்டணி அவர் மீண்டும் வரக்கூடும் என்று தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மேலும், இந்த வாழ்த்துச் செய் தியை வைத்துப் பார்க்கும்போது பாஜகவிடம் அவர் பெரிதாக எதிர் பார்க்கிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அது, தேமுதிக தலைமையில் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்போம் என்அறிவிக்கும்படியோ அல்லது முதல்வர் வேட்பாளராகத் தம்மை அறிவிக்கச் சொல்வதாகவோ பாஜகவிற்கு மறைமுகமாக உணர்த்துவதுபோல் தெரிகிறது என்பது அரசியல் கவனிப்பாளர் களின் கருத்து.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!