தைப்பூசம் 2016: அனைவரின் ஆதரவுடன் மகத்தான வெற்றி

வீ. பழனிச்சாமி

பல எதிர்பார்ப்புகளைக் கொண்டி ருந்த இவ்வாண்டின் தைப்பூசத் திருவிழா ஒருவழியாக நிறைவு பெற்றுவிட்டது. திருவிழா ஏற்பாட்டில் முக்கிய பங்கு வகித்த இந்து அறக்கட் டளை வாரியம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் ஆகியவை உள்துறை அமைச்சின் அணுக்க ஒத்துழைப்புடன் தைப் பூசத்தை வெற்றித் திருவிழாவாக நடத்தி முடித்துள்ளன. ஒரு நிகழ்ச்சி என்றாலே குறை, நிறைகள் இருப்பது இயற்கையே. அந்த வகையில் இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா ஏற்பாடுகளிலும் செயல்பாடுகளிலும் பொதுவாக நிறைகள் இருந்தபோதிலும் சில குறைகளும் தலையெடுத்தன. காவடி ஊர்வலப் பாதையில் கடைசி நேரடி இசைக் கூடம் இருந்த டோபி காட் கிரீனுக்கும் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்துக்கும் இடையே பக்தி இசையோ பாடல்களோ ஒலிக்கப்பட வில்லை;

கிளமென்சியூ அவென்யூவில் தொடங்கிய பெண்கள், சிறு வர்கள், முதியவர்களுக்கான சிறப்பு வழித்தடத்தில் பொதுமக் களையும் செல்ல அனுமதித்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது; தெண்டாயுதபாணி கோயிலுக்கு வெளியே நெடுநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது; தெண்டாயுத பாணி கோயிலுக்குள் பால்குடம், பொதுமக்கள் ஆகியோருக்கு ஒரு தடம் காவடிகளுக்கு ஒரு தடம் என்று இல்லாமல், அனைவருக்கும் ஒரே வழி என்று இருந்ததால், காவடிகள் வசதியாக ஆட முடிய வில்லை= போன்றவை பக்தர்களும் பொதுமக்களும் தெரிவித்த குறை களில் சில. இதன் தொடர்பில் தமிழ் முரசி டம் பேசிய இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர். ஜெயசந்திரன் முதலில் இந்தத் தைப்பூசத் திருவிழாவை வெற்றிகர மாக நடத்திக் கொடுத்த எல்லா பக்தர்களுக்கும் பொதுமக்களுக் கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!