கோல்ஃப் ஆட்டக்காரர் ஜோடன் ஸ்பீத் சிங்கப்பூரில்

சிங்கப்பூர்: முதன்முறையாக உலகின் முதல் தர கோல்ஃப் ஆட்டக்காரரான அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்டன் ஸ்பீத் 22, சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அபுதாபியில் எச்எஸ்பிசி கிண்ண கோல்ஃப் போட்டியில் பங்கேற்ற பின்னர் எட்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நேற்று சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தார். உலகின் முதல் தர கோல்ஃப் ஆட்டக்காரர் சிங்கப்பூர் வருவது இதுவே முதல் முறை. கடந்த மூன்று மாதங்களாக தென்கொரியா, சீனா, ஆஸ்திரேலியா, பகாமாஸ், யாவாய், அபுதாபி என்று தொடர்ந்து பயணம் செய்து வருகிறார் அவர். இந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் எஸ்எம்பிசி சிங்கப்பூல் கோல்ஃப் பொது விருதுப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜோர்டன் ஸ்பீத் சிங்கப்பூர் வந்திருக்கிறார். ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜோர்டன் ஸ்பீத் வெல்லக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதத் தொடக்கத்தில் ஹியுண்டாய் விருதுப் போட்டியில் விருதை வென்றார் ஜோர்டன் ஸ்பீத். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!