கிழக்கு ஆசியாவில் கடும் குளிர்; 50 பேர் பலி

தைப்பே: கிழக்கு ஆசிய வட்டார நாடுகளை கடுமையான குளிர் வாட்டி வதைத்து வரும் வேளையில் தைவானில் மட்டுமே 50 பேர் வரை இறந்துவிட்டனர். தென் கொரியாவில் குறைந்தது 60,000 சுற்றுலா பயணிகள் குளி ரில் சிக்கிக் கொண்டனர். வார இறுதியில் பருவநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் உடல் வெப்பநிலை பாதிக்கப்பட்டு சிலர் இறந்துவிட்டதாகவும் சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தைவா னிய ஊடகங்கள் தெரிவித்தன. கொரியாவில் மோசமான பனிப் புயல் காரணமாக அதன் புகழ் பெற்ற உல்லாச தீவான ஜேஜுவில் விமான நிலையம் மூடப்பட்டது.

அங்கு பல விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங், தென் சீனா, ஜப் பான் ஆகிய நாடுகளிலும் கடுமை யான குளிர், பனிப்பொழிவு நிலவு கிறது. தைவானில் குளிரில் இறந்தவர் களில் பெரும்பாலானவர்கள் தைப்பே, காவோசியுங், டாவோயு வான் போன்ற இடங்களில் வசித்த முதியவர்கள். இந்தப் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை 4 சென்டிகிரேட் அளவுக்கு இறங் கியது. இந்நிலையில் பொதுமக்கள் குறிப்பாக முதியோர்கள் வெளியே வராமல் வீட்டிலேயே தங்கியிருக்கு மாறு அதிகாரிகள் அறிவுறுத்தி யிருக்கின்றனர். தென் கொரியாவில் 500க்கும் மேற்பட்ட உள்ளூர், அனைத்துலக விமானச் சேவைகள் ரத்து செய்யப் பட்டதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குளிரில் சிக்கிக் கொண்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அமெரிக்காவின் வா‌ஷிங்டனில் காரை சுற்றியிருக்கும் பனியை ஒரு பெண் அகற்றுகிறார். மோசமான பனிப்புயலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வழக்க நிலைக்குத் திரும்புவதற்காக போராடி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!