பயங்கரவாதத்தை ஒன்றுபட்டு எதிர்ப்போம்: அமைச்சர் யாக்கூப்

தமிழவேல்

தீவிரவாதக் கொள்கைகளால் தாக்கம் கொண்டு பயங்கரவாத எண்ணங்கள் தோன்றும் அபாயம் தொடர்ந்து நிலவும் ஒன்று என்று தகவல் தொடர்பு அமைச்சரும் முஸ்லிம் விவகார அமைச்சருமான டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் கூறியிருக்கிறார். இணையத்தில் இதற்கான தகவல்கள் மிகவும் எளிதாகக் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டினார். "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஜமா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்புஅச்சுறுத்த லுக்கு எதிராக நாம் ஒன்றாக இணந்து நின்றோம். அதேபோல பயங்கரவாத, தீவிரவாத சித்தாந்தங் ளை எதிர்த்து சமுதாயத்தின் ஒவ்வோர் அங்கத் திலும் பகுத்தறிவுமிக்க, சீரான ஒருமித்த குரலில் பேசவேண்டும்," என்று நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அமைச்சர் யாக்கூப் அறிவுறுத்தினார். பிரச்சினைகளை நாம் வெவ்வேறு அக்கறை களுடன் அணுகுவதால் சமயம் சார்ந்த கொள்கை களில் சமூகத்தின் பார்வையும் அரசின் பார்வையும் எப்போதுமே ஒரே கண்ணோட்டத்தில் இருக்கும் என்பதில்லை என்றார் அமைச்சர் யாக்கூப்.

சமயத்தில் அதிகரித்துவரும் ஈடுபாடு அதிக பிரிவினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அரசு அக்கறை கொள்ளலாம். ஆனால் மதத்தில் ஈடுபாடு அதிகரித்தால் அது ஆக்கபூர்வமான மேம்பாட்டை ஏற்படுத்தி மேலும் துடிப்பான, செயல்திறன்மிக்க வர்களை உருவாக்கலாம் என்று சமயங்களைப் பின்பற்றுபவர்கள் கருதலாம் என்றார் திரு யாக்கூப். இரு தரப்பினரிடையேயும் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வெளிப்படும் என்றும் ஆனால் இந்த வேறுபாடுகளால் பலதரப்பட்ட கருத்துகளும் எண்ணங்களும் உதிக்கும் அதே வேளையில் அது சமூகத்தைப் பிரிக்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம் என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!