புதிய நிர்வாகியாக சிடான்

மட்ரிட்: பிரபல ஸ்பெயின் காற் பந்துக் குழுவான ரியால் மட்ரிட் டின் நிர்வாகியாக இருந்து வந்த ரஃபாயல் பெனிட்டேஸ் நீக்கப் பட்டு அவருக்குப் பதிலாக அக் குழுவின் முன்னாள் ஆட்டக்காரரும் பிரெஞ்சு காற்பந்துக் குழுவின் முன்னாள் தலைவருமான சினடின் சிடான் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்துக் கருத்துக் கூறிய முன்னாள் இங்கிலாந்து காற்பந்துக் குழுவின் தலைவரும் ரியால் மட்ரிட் குழுவில் சிடானின் சக விளையாட்டாளராக இருந்தவருமான டேவிட் பெக்கம், "இதைவிட நல்லது நடக்க முடி யுமா? அவரைப் போல் காற்பந்தில் உன்னதமாக விளையாடவும் நான் உட்பட பலர் நேசிக்கும் ஒரு குழுவை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் முனைப்புடன் செயல்படவும் எந்த நிலையிலும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத பவருமாக இருப்பவர் யார்?" என்று சிடானைப் பற்றி வானளவப் புகழ்ந் துள்ளார் பெக்கம். "சிடான் ரியால் மட்ரிட் குழுவிற்கு பயிற்றுவிப்பாளராகப் போவது பார்சிலோனா குழுவிற்கு பெப் கார்டியோலா பயிற்றுவிப்பாள ரானதை நினைவுகூர வைக் கிறது. "அவரைப் போலவே சிடானும் முழுமையாக வெற்றிகளை ஈட்ட அவரை வாழ்த்துகிறேன். இந்தப் பணிக்கு அவரே சிறந்த நபர்," என்று இவருடன் பிரெஞ்சு தேசிய காற்பந்து அணியில் விளையாடிய மற்றொரு காற்பந்து வீரரான பிசெண்டே லிசராசு புகழாரம் சூட்டினார். முன்னாள் பிரெஞ்சு காற்பந்துக் குழுவின் தலைவரும் தற்பொழுது ரியால் மட்ரிட் குழுவின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டவருமான சினடின் சிடான் (இடது), குழுவின் தலைவரான ஃபியோரென்டினோ பெரேஸ். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!