சிட்டியைச் சாய்த்த எவர்ட்டன்

லிவர்பூல்: இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்தின் அரையிறுதிப் போட்டியின் முதல் சுற்றில் நேற்று அதிகாலை எவர்ட்டன் குழுவும் மான்செஸ்டர் சிட்டி குழுவும் மோதின. இதில் எவர்ட்டன் குழுவின் ரொமேலு லுக்காக்கு வெற்றி கோலை போட்டு அடுத்த சுற்று ஆட்டத்தில் தமது குழுவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

எனினும், எவர்ட்டன் குழுவிற்கு தமது 19வது கோலை போட்ட லுக்காக் குவின் கோல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கோல் புகுந்த சமயம் அவர் 'ஆஃப்சைட்' நிலையில், அதாவது எதிரணியின் கடைசி ஆட்டக்காரருக் குப் பின்னால் இருந்தார் என்று கூறப் படுகிறது.

இத்தகைய நிலை இருக்கும்போது அவர் பந்தை உதைத்தாரா அல்லது எதிரணி கோல்காப்பாளர் திடலின் மீது தனது பார்வையைச் செலுத்துவதில் தடை ஏற்படுத்தினரா என்ற கேள்வி எழ, நடுவர் கோல் விழுந்தது சரியே என்று தீர்ப்பளித்தார். முன்னதாக, முதற்பாதி ஆட்டம் முடியும் தறுவாயில் எவர்ட்டனின் ஃபூனஸ் மேரே அடித்த கோலுக்கு பதிலடியாக ஆட்டத்தின் 76வது நிமி டத்தில் மான்செஸ்டர் சிட்டி சார்பாக ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சம நிலைப்படுத்தினார் ஜீசஸ் நவாஸ்.

லீக் கிண்ணத்தின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் எவர்ட்டன் குழுவின் வெற்றி கோலை முட்டும் லுக்காக்கு. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!