மியன்மார் ராணுவத் தலைவருடன் ஆங் சான் சூச்சி ஆலோசனை

யங்கூன்: மியன்மாரில் தேர் தலுக்குப் பிறகு முதல் நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி, அந்நாட்டு ராணுவத் தலைவர் மின் ஆங் ஹலாயிங்கை சந்தித்துப் பேசியுள்ளார். அதிகார மாற்றம் குறித்து அவ்விருவரும் பேச்சு நடத்தியதாக யங்கூன் தகவல்கள் கூறின. தேர்தலுக்குப் பின்னர் இவ்விருவரும் சந்தித்துப் பேசுவது இது இரண்டாவது தடவையாகும். அங்கு கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி 80 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அபார வெற்றி கண்டது.

அந் நாட்டு அரசியலமைப்பு சட்டப்படி சூச்சி அதிபராக வரமுடியாது என்ற போதிலும் நம்பிக்கைக்குரிய ஒருவரை அவர் அப்பதவியில் அமர்த்துவார் என்று தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!