'ராஞ்சனா', 'ஷமிதாப்' ஆகிய படங்களின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான தனுஷுக்கு ஹாலி வுட்டிலும் நடிக்க வாய்ப்புக் கிட்டியுள்ளது. இந்திய நடிகர்களில் இர்பான் கான், அனில் கபூர், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், ஓம் பூரி, சோனு சூத் போன்ற நடிகர் களுக்குப் பிறகு தனுஷும் ஹாலி வுட்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். ஈரானிய- பிரெஞ்சு இயக்குந ரான மரியான் சத்ராபி இயக்கும் புதிய ஹாலிவுட் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். மரியான் சத்ராபி ஏற்கெனவே பிரெஞ்சு மொழியில் 'பெர்சி போலிஸ்' என்ற படத்தை இயக்கியவர்.
தனுஷ் நாயகனாக நடிக்கும் அந்தப் படத்தில் சான் ஆண்ட் ரியாஸ் படத்தின் நாயகி அலெக் ஸாண்ட்ரா தத்தாரியோ, உமா தர்மன் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். ஆங்கில 'காமிக்' நாவலைத் தழுவி இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தில் தனுஷ் இந்திய மந்திரவாதியாக நடிக்கிறாராம்.