‘அரண்மனை 2’ படத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் திரையுலகம்

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் 'அரண்மனை 2' படம் வருகிற 29ஆம் தேதி உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. சுந்தர்.சி இயக்கி நடிக்கும் இந்தப் படத்தில் நாயகனாக சித்தார்த், நாயகிகளாக திரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி நடிக்கிறார். பேய்ப் படமான 'அரண்மனை' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகமான இதுவும் திகில் கலந்த கலகலப்பான பேய்ப் படமாக உருவாகி இருக்கிறது.

திரிஷா முதல் முதலாக நடிக்கும் பேய்ப் படம் இது. சுந்தர். சி இயக்கத்தில் முக்கிய நடிகர்- நடிகைகள் நடித்திருப்பதால் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 'அரண்மனை 2' தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகாவிலும் மற்ற வடமாநிலங்களிலும் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் 'அரண்மனை 2' படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!