மெல்பர்ன்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்தி ரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு வெற்றியாளரான செரீனா வில்லி யம்ஸ் (அமெரிக்கா) - 2008ஆம் ஆண்டு வெற்றியாளரான மரியா ஷரபோவா (ரஷ்யா) மோதினார்கள். நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வின் அபாரமான ஆட்டத்துக்கு முன்பு 5வது இடத்தில் இருக்கும் ஷரபோவாவின் ஆட்டம் எடுபட வில்லை. செரீனா 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றார்.ஈ° மற்றொரு காலிறுதி ஆட்டத் தில் 4ஆம் நிலை வீராங்கனையான ரட்வன்ஸ்கா (போலந்து) - 10ஆம் நிலை வீராங்கனை கார்லா (ஸ்பெயின்) மோதினார்கள். இதில் ரட்வன்ஸ்கா 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் ஆஸ்திரே லியப் பொது விருதுப் போட்டியில் 2வது முறையாக அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதற்கு 2014ஆம் ஆண்டும் தகுதி பெற்று இருந்தார்.
செரீனா அரை இறுதிக்குத் தகுதி
27 Jan 2016 07:33 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jan 2016 08:00

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றங்களைப் பற்றிய கண்காட்சி

லிட்டில் இந்தியா கலவரத்தைத் கண்டவர்கள் தங்கள் அனுபவங்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!