தொழில்நுட்பம் மிளிரும் ‘உத்ரா’

காலச்­சக்­க­ரத்­தின் சுழற்­சி­யில் அகப்­ப­டாத சமு­தா­யம். இருந்­தும் அவர்­கள் வாழ்வில் அதிவேக தொழில்­நுட்­பம். நீதி காக்கும் அரசர், அவ­ருடைய வேடிக்கை­யான அமைச்­சர்­கள். அரசவை குழப்­பங்களுக்­கிடையே, துரோகம், காதல், சூழ்ச்சி. இவை அனைத்­தும் சேர்ந்த ஒரு படைப்­புத்தான் உத்ரா 2016. புலிப்­பு­ரம் என்ற நாட்டில் நிலவும் பிரச்­சினை­கள், அதை எதிர்­கொள்ள மக்­களும் அர­சவை­யி­ன­ரும் எடுக்­கும் முயற்­சி­கள் = இவையே உத்ரா நாட­கத்­தின் கதை கரு­வா­கும். கேளிக்கை அம்­சத்­திற்­காக ஆடல் பாடல்­கள் இருந்தா­லும், கதை­யோட்­டத்­தில் பல சமூக செய்­தி­களும் அடங்­கியிருக்கும்.

பழமையை­யும் புதுமையை­யும் ஒன்­றிணைத்து ஒரு புதிய சாதனை படைக்க முற்­பட்­டுள்­ள­னர் நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லக்­க­ழ­கத்­தின் தமிழ் இலக்­கிய மன்ற மாண­வர்­கள். முழு­வ­தும் மாண­வர்­களின் உழைப்­பில் தயாராகி வரும் உத்ரா, சிங்கப்­பூர் தமிழ் நாடக அரங்­கில் தனக்­கென ஒரு முத்திரை பதிக்­க­வுள்­ளது. அதிக அளவில் தொழில்­நுட்­பம் பயன்­படுத்தப்பட்­டுள்­ள­தோடு பார்வை­யா­ளர்­களு­டன் இரு­வ­ழித் தொடர்­பு­கொள்­ளும் அங்கங்களும் உள்ளன. கடந்த ஒன்பது மாதங்க­ளாக நடி­கர்­கள், நட­ன­ம­ணி­கள், தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள், எழுத்­தா­ளர்­கள், ஆடை அலங்கா­ரக் குழு, இசைக் கலை­ஞர்­கள் என சுமார் நூற்றுக்­கும் மேற்­பட்ட மாண­வர்­கள் இந்தப் படைப்­பிற்­கா­கத் தங்களை அர்­ப­ணித்­துள்­ள­னர். "ஒவ்வொரு மாண­வ­ருக்­குள்­ளும் இருக்­கும் கலை ஆர்­வ­மும் கட்­டுக்­க­டங்கா உழைப்­புமே உத்­ரா­வின் உந்து சக்­தி­யா­கும். கலை­களுக்கு எல்லை­கள் இல்லை என்பதை நிரூபிக்­கும் ஒரு படைப்­பாக உத்ரா அமையும்," என்றார் உத்­ரா­வின் தலைவரும் நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லக்­க­ழக தமிழ் இலக்­கிய மன்றத்­தின் துணைத் தலை­வ­ருமான குமரன் தமிழ்­செல்­வம், 25.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!