‘எம்பிஏ’ கல்வியில் ‘இன்சியட்’ வர்த்தகப் பள்ளிக்கு முதலிடம்

'ஃபைனான்­சி­யல் டைம்ஸின்' முது­நிலைப் பட்டக் கல்­விக்­கான அண்மைய உலகத் தர­வ­ரிசைப் ­பட்டியலில் சிங்கப்­பூ­ரில் 'இன்­சி­யட்' வர்த்­த­கப் பள்­ளிக்கு முத­லி­டம் கிடைத்­துள்­ளது. ஆயர் ராஜா அவென்­யூ­வில் அமைந்­துள்ள இப்­பள்ளி, ஹார்­வர்ட், லண்டன் வர்த்­த­கப் பள்­ளி­களை­விட மூன்று நிலை கள் உயர்ந்து முதல் இடத்தைப் பிடித்­துள்­ளது. ஹார்­வர்ட் வர்த்­தகப் பள்ளி இரண்டா­வது நிலையை­யும் லண்டன் வர்த்­தகப் பள்ளி மூன்றா­வது நிலையை­யும் பெற்­றுள்­ளன. 'இன்­சி­யட்' வர்த்­த­கப் பள்­ளி­யின் வளா­கங்கள் பாரிஸ், அபுதாபி ஆகிய நக­ரங்களி­லும் அமைந்­துள்­ளன.

'இன்­சி­யட்'டுக்கு இது மூன்றா­வது வெற்­றி­யா­கும். அதன் 'சின்ஹுவா=இன்­சி­யட் எக்­ச­கி­யூ­டிவ் எம்பிஏ' பட்­டக்­கல்வி 'ஃபைனான்­‌ஷி­யல் டைம்ஸ்' உலகத் தரப்­பட்­டி­ய­லில் முதல் இடத்தை ஏற்கெனவே பெற்­று­விட்­டது. அதன் 'குளோபல் எம்பிஏ' பட்­டக்­கல்வி தனிப்­பட்ட கல்வித் திட்­டத்­தில் முதல் இடத்தைப் பிடித்­தது. 'இன்­சி­யட்'டின் இந்தச் சாதனைக்கு அதன் முன்னாள் மாண­வர்­களும் கல்வித் திட்­டத்­தில் ஏற்­பட்­டுத்­தப்­பட்ட பல்வேறு மேம்பாடு­களுமே காரணம் என்று அதன் தலைவர் இலியன் மிஹோவ் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!