பெற்றோர் எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே பிள்ளைகளிடையே உருவ அமைப்பு பற்றிய கண்ணோட்டம் ஏற்பட்டுவிடுவதாகவும் ஊடகங்கள் அவர்களது கண்ணோட்டத்தை பெரிதும் பாதிக்கின்றன என்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தில் உள்ள வீ கிம் வீ தொடர்பு, தகவல் பள்ளி மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இளம் வயதிலேயே ஊடகங்களுக்கு பழக்கப்பட்டுவிடும் பிள்ளைகள் தினமும் சராசரியாக 4.7 மணி நேரத்தை சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடக நடவடிக்கைகளில் செலவிடுவது ஊடக மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான பிள்ளைகள் அழகு என்பதற்கு மேற்கத்திய நாடுகளின் வரையறையையே மனதில் கொள்வதாக சிறுவர் மனநல நிபுணர்கள் குறிப்பிடுகின் றனர். இது ஆசியப் பிள்ளைகளிடையே எதிர்மறைத் தாக் கத்தை உருவாக்கக்கூடும் என வீ கிம் வீ தொடர்பு, தகவல் பள்ளியின் துணைப்பேராசிரியர் மையோஜுங் சுங் கருத்துரைத் துள்ளார்.