வனவிலங்கு பூங்காக்களில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

சிங்கப்பூரின் நான்கு வனவிலங்கு பூங்காக்களில் உள்ள விலங்கு களும் சீனப் புத்தாண்டை கொண் டாடவிருக்கின்றன. இந்த சீனப் புத்தாண்டு கொண்டாட்டக் காலத்தில் சிங்கப் பூர் விலங்கியல் தோட்டம், ரிவர் சஃபாரி, நைட் சஃபாரி, ஜூரோங் பறவைப் பூங்கா ஆகியவற்றில் உள்ள விலங்குகளுக்கு புத்துயி ரூட்டும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விலங்குகளுக்கான புது நட வடிக்கைகளை பிப்ரவரி 6ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதி வரை பொது மக்கள் காணலாம்.

சிங்கப்பூர் விலங்கியல் தோட் டத்தின் ஊழியர்கள், அங்கு வசிக் கும் டமரின்ஸ், ஜவான் லங்குர் வகை குரங்குகளுக்கு சிவப்பு உறைகளில் உணவுப் பொருட்கள் நிரப்பி வைக்கப்பர். இவை மரக்கிளைகளில் கட்டி தொங்க வைக்கப்படும். அதே போல ரிவர் சஃபாரியில் உள்ள அணில் வகை குரங்கு களுக்கு சிவப்பு உறைகளில் நிலக் கடலை, வால்நட் வைக்கப்படும். சிவப்பு உறைகளில் வைக்கப் பட்டுள்ள உணவுப் பொருட்களை வனவிலங்குகள் தேடி வெளியே எடுத்து உண்ணும் காட்சி ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும்.

மரக் கிளைகளில் வித்தியாசமான பொருட்கள் தொங்குவதையும் சிவப்பு உறைகளில் உள்ள உணவுகளையும் உற்சாகத்துடன் ஆராயும் குரங்குகள். சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!