தர்மசங்கடத்தில் நெளிந்த மு.க. ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் திருச்சியில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா அழைப்பு மை யத்தைப் பற்றி குறைகூறினார். அதனை நேரடியாக நிரூபிக்க முயன்ற ஸ்டாலின் அம்மா அழைப்பு மையத்தை தொடர்புகொண்டார். ஆனால், அது செயல்படவில்லை என்று தெரிவித்தார். உடனே, தனது கொளத்தூர் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறிய அவர், அந்த எண்ணுக்கு முயற்சி செய் தார். ஆனால், அந்த எண் வேலை செய்யவில்லை.

தொடர்ந்து கட்சிக்காரர் ஒரு வரை மேடைக்கு அழைத்து, அம்மா அழைப்பு மையத்தை கை பேசி மூலம் அழைக்கச் சொன் னார். அப்போது அம்மா அழைப்பு மைய எண் வேலை செய்தது. மேலும், குறைகளைப் பதிவு செய் வதற்கான குரல் பதிவு கேட்டது. அதே நேரம், தனது தொகுதி மக்களுக்காக அறிவிக்கப்பட்ட எண்ணைத் தொடர்புக்கொள்ளு மாறு அதே நபரிடம் சொன்னபோது அந்த எண் வேலை செய்யவில்லை. இதனால் மேடையில் தர்மசங்கடத் துக்கு ஆளான ஸ்டாலின், பேச்சை வேறு திசைக்கு மாற்றினார். தற்போது இந்த காணொளி சமூகத் வலைதளங்களில் அதிக மாகப் பரவி வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!