தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் அதிமுக தனித்தே போட்டியிட்டு வந்து உள்ளது. கூட்டு சேர்ந்த சிறுசிறு கட்சிகள்கூட அதிமுகவின் சின் னத்திலேயே போட்டியிட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம் கண்டு பெரு வெற்றிபெற்ற வரலாற்றை 2014ஆம் ஆண்டில் அதிமுக படைத்தது. பலம்பொருந்திய கட்சியாக வலம் வந்துகொண்டிருந்த அதிமுக மீது அக்கட்சியின் தலைமையே இப்போது நம்பிக்கையற்ற நிலையில் உள்ளது.
குறிப்பாக, கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜெயலலிதாவின் செல்வாக்கு சற்று குறைந்திருப்பதோடு இதனால் அதிமுக பலம் குன்றியிருப்பதைப் போன்ற தோற்றம் நிலவுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை, மதுக்கடைகள் என்று கடந்த ஆண்டின் இறுதியில் ஆளுங்கட்சிக்கு எதிராக இருந்து வந்த அம்சங்களோடு ஆண்டிறுதி யில் நிகழ்ந்த சென்னை பெரு வெள்ளமும் சேர்ந்துவிட்டது. இவற்றை எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரமாக செய்யும்போது அதிமுகவின் வெற்றிக்குக் குந்த கம் ஏற்படலாம். இதனைக் கருத் தில் கொண்டே பாஜக, தமாகா போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் மனநிலை யில் அதிமுக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற கட்சிகளுக்குப் பெரிய அளவில் வாக்குவங்கி இல்லாவிட்டாலும் தனது வெற்றியைப் பாதிக்கக்கூடிய வாக்குகளை அவை பெற்றுத்தரும் என அதிமுக தலைமை நம்புகிறது.