வேகமாக முன்னேறும் இந்தியாவை உலகம் கவனிப்பதில்லை: அமெரிக்க அதிபர் வேட்பாளர்

வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தியா பற்றி யாரும் அதிகமாகக் கண்டுகொள்வதில்லை என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொ னால்ட் டிரம்ப் ஏற்கெனவே தனது தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி விட்டார்.

தனது தேர்தல் பிரசாரத்தில் இதுவரை சீனா, மெக்சிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் குறித்து பேசியிருக்கும் அவர், முதன் முறையாக இந்தியா பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். "இந்தியா மிகவும் பிரமாதமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், யாரும் இந்தியா பற்றி பேசுவ தில்லை. "கடந்த 2007ஆம் ஆண்டில் சிஎன்என் தொலைக்காட்சிக்கு என்ன பேட்டி அளித்து இருந் தேனோ அதுதான் தற்போது நடந்து வருகிறது. "ஈராக், ஈரான், சீனா, ஜப்பான், இந்தியா பற்றி என்ன கூறினேனோ அதுதான் தற்போது நடந்து வரு கிறது. பொருளியலைப் பொறுத்த வரை திடீரென அனைவரும் சீனா குறித்தும் இந்தியா குறித்தும் கருத்து கூறப்பட்டு வரும் நிலையில் அமெரிக்க பொருளியல் நிலை வருத்த மளிக்கும் நிலையில் உள்ளது. நமக்கு மரியாதை குறைந்து வருகிறது," என்று தெரிவித்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!