சிங்கப்பூரிலிருந்து சென்ற விமானத்தில் புகைபிடித்த பயணி மும்பையில் கைது

சிங்கப்பூரிலிருந்து மும்பை சென்ற விமானத்தில் புகைபிடித்த ஆடவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். ரவி தங்கார் எனப்படும் அந்த நபர் விமானம் கடந்த ஞாயிற்றக்கிழமை பறந்து கொண்டிருந்த வேளையில் கழிவறைக்குச் சென்றுள்ளார். பின்னர் கழிவறைக்குள் இருந்தவாறே புகைபிடித்துள்ளார். திடீரென்று கழிவறைக்குள் இருந்து புகை வருவதை அறிந்து அதிர்ச்சியுற்ற விமானப் பணியாளர் ஒருவர் மற்ற ஊழியர்களையும் அதிகாரிகளையும் அவசரமாக அழைத்தார். உடனடியாக கதவைத் திறக்குமாறு ரவி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

வெளியே வந்ததும் அவரிடமிருந்த சிகரெட் பாக்கெட்டும் லைட்டர் சாதனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பையில் விமானம் தரை இறங்கியதும் ஜெட் ஏர்வேஸின் பாதுகாப்புக்குழு, ரவியைப் பிடித்து விமான நிலைய போலிஸ் நிலை யத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு சிறிது நேரம் முன்னதாக அபுதாபியிலிருந்து மும்பை வந்திறங்கிய விமானத்தின் அவசரக் கதவைத் திறக்க முயன்ற ஸ்டீவ் ஸ்டிட்ச்லர் என்னும் ஜெர்மன் ஆடவர் போலிசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது வேடிக்கைக்காக அந்தக் கதவைத் தாம் திறந்ததாகக் கூறினார். அவர் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!