கெர்ரி: உலகுக்கு மிரட்டலாக விளங்கும் வடகொரியா

பெய்ஜிங்: உலக நாடுகளுக்கு வடகொரியா பெரும் மிரட்டலாக விளங்குகிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி அறிவித்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம் உலகப் பாதுகாப்புக்கு "மிகப்பெரிய சவால்," என்றும் திரு கெர்ரி குறிப்பிட்டார். சீனா வந்துள்ள திரு கெர்ரி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் வடகொரியா பற்றி பேசினார். வடகொரியா அதன் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட சீனா அதன் நட்பு நாட்டுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்றும் கெர்ரி கேட்டுக்கொண்டார்.

வடகொரியா இம்மாதத் தொடக்கத்தில் நான்காவது முறையாக அணு ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ள நிலையில் திரு கெர்ரி இவ்வாறு கூறினார். அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் மற்ற பங்காளி நாடுகளையும் பாது காக்கத் தேவையான நடவடிக் கைகளையும் அமெரிக்கா எடுக்கும் என்றும் அவர் சொன்னார். சீன வெளியுறவு அமைச்சருடன் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!