2015ல் 750க்கு மேற்பட்ட பேருந்துகள் செயல்பட்டன

திட்டமிட்ட வரி நிதியிலிருந்து வாங்கத் திட்டமிடப்பட்ட 1,000 கூடுதல் பேருந்துகளில் முக்கால் பகுதிக்கு மேற்பட்டவை கடந்த ஆண்டு இறுதிக்குள் சேவையில் விடப்பட்டன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது. பேருந்துச் சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் $1.1 பில்லியன் நிதி 1,000 பேருந்துகளை வாங்க ஒதுக்கப்பட்டது. இவை பத்து ஆண்டுகளுக்குச் சேவை யில் ஈடுபடுத்தப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. அந்த 1,000 பேருந்துகளில் கடந்த ஆண்டு இறுதி வரையில் 760 பேருந்துகள் சேவையாற்றின என்றும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1,000 பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருக்கும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

இதற்கிடையே, ஏழு புதிய பேருந்துச் சேவைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை எஸ்பிஎஸ் டிரான்சிட் சேவைகளான 47, 117, 118, 258, எஸ்எம்ஆர்டி சேவை 979, 'சிட்டி டைரக்ட்' சேவைகள் 664, 665. நடப்பில் இருந்த எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் 49 எஸ்எம்ஆர்டி யின் 983 ஆகிய இரு சேவைகளும் நீட்டிக்கப்பட்டன. பேருந்துச் சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் மேலும் 240 பேருந்துகள் சாலைகளில் பயணங்களை மேற்கொள்ளும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. கோப்புப் படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!