பிரான்ஸ் அதிபரை சந்தித்த ஐஸ்வர்யா

பிரான்ஸ் அதிபரை சந்தித்த ஐஸ்வர்யா நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு விருந்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில், பிரான்ஸ் அதிபருடன் கலந்து கொள்வதற்காக பிரெஞ்சு தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியர், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி அந்த விருந்தில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய், பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவை சந்தித்து பேசினார். இதேபோல் மேலும் சில பிரபலங்களுக்கும் இந்த விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். மேலும், பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது உயரிய பொதுமக்களுக்கான விருது எனக் கருதப்படும் 'நைட் ஆப் தி ஆர்டர் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ்' என்ற விருதையும் பெற்றுள்ளார். "இந்த விருந்தில் பங்கேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இது மறக்க முடியாத இனிய அனுபவம். தொடர்ந்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பேன்," என இந்த விருந்து நிகழ்வின் போது பிரான்ஸ் தூதரிடம் கூறினாராம் ஐஸ்வர்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!