ஐந்து வயது குழந்தையின் தந்தையாக நடிக்கும் அருள்நிதி

'நாலு பேரும் நல்லா இருந்த ஊரும்' படத்துக்குப்பிறகு அருள்நிதி நடிக்கும் படம் 'ஆறாது சினம்'. 'டிமாண்டி காலனி'யை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இது அருள்நிதி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இரண்டாவது படம். இதில் இவரது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்கள் இருவரும் 5 வயது குழந்தைக்கு தாய், தந்தையாக நடிக்கிறார்கள். 'ஈரம்', 'வல்லினம்' படங்களை இயக்கிய அறிவழகன் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இசை - எஸ்.எஸ்.தமன்.

கொலைக் குற்றவாளிகளை வேட்டையாடும் காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் அவற்றை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதும்தான் இப்படத்தின் கதையாம். தற்போது மதுரை, செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பிப்ரவரியில் 'ஆறாது சினம்' திரைக்கு வருகிறது. "எனது திரையுலகப் பயணத்தில் பிரமாண்ட படங்களில் நடிப்பதைவிட யதார்த்தமான படைப்புகளில் ஓர் அங்கமாக இருப்பதையே விரும்புகிறேன். அந்த வகையில் 'ஆறாது சினம்' படம் எனக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறேன்," என்கிறார் அருள்நிதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!