50,000 திருக்குறள் நூல்களை விநியோகிக்கும் காங்கிரஸ்

பெங்களூரு: கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக் குறள் நூல்களைக் கர்நாடகா மாநிலம் முழுவதும் விநி யோகிக்க உள்ளது காங்கிரஸ் கட்சி. மொத்தம் 50 ஆயிரம் நூல்களை விநியோகிக்க இருப் பதாக அம்மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித் துள்ளார். இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண் டும் என்ற கோரிக்கையை வர வேற்பதாக பெங்களூருவில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மனித குலத்துக்கான நற் செய்தியாக திருக்குறளை திரு வள்ளுவர் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் கூட திருக்குறள் எனும் நூல் உயிர்ப்புடன் இருப்பதே அந்நூலின் பெருமையாகும் என்றார். "எனவேதான் திருக்குறளின் அருமை, பெருமைகளை கர் நாடகத்தில் வாழும் தமிழர், கன்னடர், தெலுங்கர், மலையா ளிகள், மராத்தியர் உள்ளிட்ட அனைத்து மொழியினர் மத்தி யிலும் பரப்ப முடிவு செய்துள்ளோம். "முதற்கட்டமாக கன்னடத் தில் மொழிபெயர்க்கப்பட்ட ஐம்பதாயிரம் திருக்குறள் நூல் கள் கர்நாடகத்தின் மாவட்ட தலைநகரங்களில் திருவள்ளு வர் விழா நடத்தி விநியோகிக் கப்படும். "திருவள்ளுவரின் அரிய பல தத்துவங்களை பரப்ப நாட்டு மக்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும்," என்று எஸ்.எஸ்.பிரகாசம் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!