ஒழுங்காகப் பணியைச் செய்யாத அதிகாரிகளை நீக்க மோடி உத்தரவு

பணி செய்யாத, மக்­களின் புகார்­களுக்­குச் செவி சாய்க்­காத அதி­கா­ரி­களுக்கு இந்­தி­யப் பிர­த­மர் நரேந்திர மோடி கடும் எச்­ச­ரிக்கை விடுத்துள்ளார். அவர்­கள் செயல்­பாட்டை உட­ன­டி­யாக மதிப்­பீடு செய்து, தேவைப்பட்­டால் பதவி நீக்கம், ஓய்­வூ­தி­யத்தை வெட்­டு­வது போன்ற நட­வ­டிக்கை­களை எடுக்­கு­மாறு அரசின் செய­லா­ளர்­களுக்கு அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார். மத்திய அரசு செய­லா­ளர்­கள், தலைமை செய­லா­ளர்­களு­டனான மாதாந்­திர கூட்­டத்­தில் சுங்கத்­ துறை அதி­கா­ரி­களுக்கு எதிரான புகார்­களை ஆய்­வு­செய்­யும்­போது இதனைக் கூறிய அவர், சுங்கத்­ துறை அதி­கா­ரிகள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கூறினார்.

பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் அரசு நட­வ­டிக்கை­கள், மக்களின் குறை­கேட்பு, இணையம் வழி­யி­லான தொடர்பு உள்­ளிட்ட பணி கள் குறித்து ஆலோசனை நடத்­தினார். அரசு ஊழி­யர்­களில் பலர் மீது அடுத்­த­டுத்­துப் புகார் வந்தும் இதுவரை நட­வ­டிக்கை எடுக்­கா­தது குறித்து கேள்வி எழுப்­பினார். பொது­மக்­களு­டன் தொடர்­புடைய அனைத்து மத்திய அரசுத் துறை­களும் மக்­களின் குறை தீர்க்­கும் பிரிவை தொடங்கி உதவி செய்ய வேண்டும் என்ற அவர், மக்கள் குறை தீர்க்­கும் பிரி­வுக்கு வரும் புகார்­கள் மீது உட­னுக்­கு­டன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தினார். பிர­த­மர் உத்­த­ரவு குறித்து அனைத்து அதி­கா­ரி­களுக்­கும் எச்­ச­ரிக்கை விடுக்கப்­பட்­டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!