குறைவான நிலையில் நீடிக்கும் வேலையின்மை விகிதம்

வேலை­யின்மை விகிதம் குறைவாக இருந்த­போ­தும் கடந்த ஆண்டு 31,800 பேர் பணியில் அமர்த்­தப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­விக்­கிறது. கடந்த 12 ஆண்­டு­களு­டன் ஒப்­பி­டுகை­யில் சென்ற ஆண்டு ஆகக் குறைவான எண்­ணிக்கை­யிலானோர் பணியில் அமர்த்­தப்­பட்­டனர். கடந்த ஆண்டு பணியில் அமர்த்­தப்­பட்­டோ­ரில் பெரும்பா­லா­னோர் வெளி­நாட்டு ஊழி­யர்­கள். சுமார் 100 இடங்களில் குடி­மக்­கள், நிரந்த­ர­வா­சி­கள் பணியில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர். கடந்த மாத இறு­தி­யில் மொத்தம் 3,655,600 பேர் சிங்கப்­பூ­ரில் பணியில் இருந்த­னர். அனைத்­து­ல­கப் பொரு­ளி­யல் மந்த­நிலை, சிங்கப்­பூர் பொரு­ளி­யல் வளர்ச்சி மெது­வடைந்த நிலை, கட்­டுப்­படுத்­தப்­பட்ட வெளி­நாட்டு ஊழியர் எண்­ணிக்கை ஆகி­ய­வற்­றுக்­கிடையே கடந்த ஆண்டில் வேலை வளர்ச்சி விகிதம் மந்த­மாக இருந்த­தாக அமைச்சு தெரி­ வித்­தது.

பணிக்கு அமர்த்­தப்­பட்ட உள்ளூர், வெளி­நாட்டு ஊழி­யர்­களின் எண்­ணிக்கை கடந்த ஆண்­டு­களைவிடக் குறை­வா­கவே இருந்தது. சென்ற ஆண்டு வேலை­யின்மை விகிதம் குறைந்த அளவான 1.9 விழுக்­காட்­டி­ லேயே இருந்தது தெரி­ய­வந் ­ துள்­ளது. 2014ஆம் ஆண்டில் வேலை­யின்மை விகிதம் 2 விழுக்­கா­டாக இருந்தது. சிங்கப்­பூ­ரர்­களின் வேலை­யின்மை விகிதம் கடந்த இரண்டு ஆண்­டு­களில் 2.9 விழுக்­கா­டாக இருந்தது. சிங்கப்­பூ­ரர்­கள், நிரந்த­ர­வா­சி­களின் கூட்டு வேலை­யின்மை விகிதம் 2014ஆம் ஆண்டு இருந்ததை­விட 0.1% கூடி 2.8 விழுக்­கா­டா­னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!