மான்செஸ்டர்: இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்தின் மற்றொரு அரையிறுதிப் போட்டி நேற்று அதிகாலை நடந்தது. இதில் மான்செஸ்டர் சிட்டி குழுவும் எவர்ட்டன் குழுவும் மோதின. இந்த அரையிறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தை 2=1 என எவர்ட்டன் வென்றிருந்ததால் அது இரண்டாம் சுற்று ஆட்டத்திலும் எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்றும் பலரும் நம்பியிருந்த நிலையில் மான்செஸ்டர் சிட்டி குழுவின் டி பிரய்ன ஆட்டத்தின் முடிவை மான்செஸ்டர் சிட்டிக்கு ஆதரவாக மாற்றி சாதனை புரிந்துள்ளார்.
ஆட்டம் தொடங்கிய 18ஆம் நிமிடத்தில் எவர்ட்டனின் ரோஸ் பார்க்கிலி தனி ஆளாகப் பந்தை எடுத்துக்கொண்டு அற்புதமாக கோல் போட்டு சிட்டி குழுவுக்கு சிக்கலை ஏற்படுத்தினார். ஆனால், மான்செஸ்டர் சிட்டி யின் ஃபெர்னாண்டின்யோ பதி லுக்கு ஒரு கோல் போட்டு ஆட் டத்தை சமன் செய்தார். பின்னர் டி பிரய்ன, தமது அணி சார்பாக ஒரு கோல் போட்டு, தமது சகாவும் மான்செஸ்டர் சிட்டி குழுவின் தாக்குதல் ஆட்டக்காரருமான செர்ஜியோ அகுவேரோ மற்றொரு கோல் போட ஏதுவாகப் பந்தை அவர் பாதையில் உதைத்தார். படம்: ராய்ட்டர்ஸ்