மனதாரப் பாராட்டிய சிவா

பல்வேறு தடைகளைக் கடந்த பொங்கல் விருந் தாக திரைக்கு வந்த 'ரஜினி முருகன்' ரசிகர் களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையொட்டி அந்தப் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அஜித், விஜய், தனுஷ் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த அவர், அவர்களை மனதாரப் பாராட்டினார். "அஜித் உண்மையான, பண்புள்ள மனிதர். என்னை உற்சாகப்படுத்திய அவரது வார்த்தை களையும் அறிவுரையையும் என்னால் மறக்க முடியாது.

"விருதுகள் வழங்கும் விழாவில் விஜய் சார் கையால் விருது பெற்றது எனது வாழ்க்கையில் சிறந்த தருணங்களில் ஒன்று. என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள் எனக்கு உற்சாகம் அளிப்பதாக அமைந்தன. மறக்க முடியாத இந்த வாய்ப்பை உருவாக்கி தந்தவர் களுக்கு நன்றி. "நடிப்பில் தனுஷ் ஒரு திறமையான மனிதர். தற்போது ஹாலிவுட் செல்லும் அவர், அங்கும் அதை நிரூபிப்பார்," என்றார். சிம்பு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு 'அவர் திறமையானவர்' என்றார் சிவகார்த்திகேயன்.

உங்கள் கைபேசியில் என்ன ரிங்டோன் வைத்திருக்கிறீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்டபோது, "எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்ற 'நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஒடு ராஜா' பாடலை 'ரிங்டோனாக' வைத்திருக்கி றேன். அந்தப் பாடல் எனக்குள் தன்னம்பிக் கையை விதைத்தபடியே இருக்கிறது. "ஒவ்வொரு முறையும் அந்தப் பாடல் ஒலிக்கும் போதும் உற்சாகமாக உணர்கிறேன். அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது," என்றார் சிவகார்த்திகேயன். இதற்கிடையே சிவகார்த்திகேயனையும் பலர் புகழ்கிறார்கள். அவர்களில் ஒளிப்பதி வாளர் பி.சி.ஸ்ரீராமும் ஒருவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!