மடோனா நடிப்பைப் பாராட்டிய விஜய் சேதுபதி

மலையாளத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற 'பிரேமம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மடோனா. இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'காதலும் கடந்து போகும்' படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை 'சூதுகவ்வும்' படத்தை இயக்கிய நலன் குமரசாமி இயக்கி உள்ளார். இப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது கொரிய மொழியில் வெளியான படத்தின் மறுபதிப்பாம். விஜய் சேதுபதி இப்படத்தில் கவுன்சிலரிடம் வேலை செய்பவராக நடித்திருக்கிறார்.

நாயகி மடோனா சென்னையில் வேலை தேடும் பெண்ணாக நடித்திருக்கிறார். இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் காதல் எப்படி உருவாகிறது என்பதே படத்தின் கதை. நகைச்சுவைப் பகுதியை தனியாக அமைக்காமல், கதையோடு ஒன்றிப் போவதுபோல் அமைத்திருக்கிறோம். இரு பாடல்கள், இரு சண்டைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. சமுத்திரக்கனி இப்படத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கிறார்.

நலன் இயக்கிய 'சூதுகவ்வும்' படத்தை விட முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என படக்குழுவினர் உறுதியளிக்கிறார்கள். இந்தப் படத்தில் மடோனாவின் நடிப்பைப் பார்த்து விஜய் சேதுபதி வியந்து போனாராம். அந்தளவிற்கு போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மடோனா. இதற்காக மடோனாவை வெகுவாகப் பாராட்டினாராம் விஜய் சேதுபதி. அதனால் மடோனா ரொம்பவே உற்சாகத்தில் உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!