மதிக்காத தமிழக அரசு: சாடுகிறார் ராமதாஸ்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை அரசு மதித்துச் செயல்பட வேண் டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கையில், ஜனநாயகத் தின் தூண்களில் ஒன்றான நீதித் துறையை இன்னொரு தூணான அரசு நிர்வாகம் மதிக்காமல் செயல்பட்டால் அது ஜனநாயகத் துக்கு பெரும் ஆபத்தாக முடியும் என கூறியுள்ளார். ஜனநாயகத்தை காப்பதற்காக இனியாவது தமிழக அரசு திருந்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், நீதிமன்றங்களை மதித்து நடக்க அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். "கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் நூறு முறையாவது தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றமும் அதன் மதுரைக் கிளையும் கண்டனம் தெரிவித் துள்ளன. அதுமட்டுமின்றி பல முறை அரசுக்கு அபராதமும் விதித்துள்ளன.

"கடந்த 2014ஆம் ஆண்டில் கிரானைட் ஊழல் விசாரணைக்காக அதிகாரி சகாயத்தை விடுவிக்கா ததற்காக பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது, நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளா தது தொடர்பான வழக்கில் இருபத்து ஐந்தாயிரம் தண்டம் விதித்தது, கதர் கிராமத் தொழில் வாரிய ஊழியர்கள் இருபது பேருக்கு ஊதியம் வழங்கப்படாத வழக்கில் இருபதாயிரம் அபராதம் விதித்தது எல்லோருக்கும் தெரி யும்," என ராமதாஸ் பல்வேறு விவரங்களை அரசுக்கு எதிராகப் பட்டியலிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!